சித்திக்கு முக்திக்கு முத்தான முக்கண்ணனே!
எம்முக்திக்கு யாதொருக் காரணியும்
தடைநில்லா தெம்மை பேணாயோ?
மாண்டே இப்பிறப் புற்றேன் - யான்
மாலாதொரு வேட்கை யரும்பி மலர
பிணியாம் மற்றொரு பிறப்பறுகாயோ?
ஊர்ந்தே யுவந்தே யுற்றதல மடைந்தேன்
நின்தாள் அடியே பற்றிச் சுழன்றேன் - யான்
னொருக் நாகமென தஞ்சமருளாயோ?
கோசமைந்தும் பூதமைந்தும் பிறுத்து
பூட்டியே இவ்யாக்கை யானதுவும் - அது
புக்கிய தெஞ்சீவனையும் காவாயோ?
நில்லாது நடவாது பறப்பது செய்யாதும்
சித்தம்பெற பற்றினேன் நினையே - அது
தாமதமில்லா மரூட் கொடாயோ!
எம்பெருமானே போற்றி போற்றி
திருச்சிற்றம்பலம்
எம்முக்திக்கு யாதொருக் காரணியும்
தடைநில்லா தெம்மை பேணாயோ?
மாண்டே இப்பிறப் புற்றேன் - யான்
மாலாதொரு வேட்கை யரும்பி மலர
பிணியாம் மற்றொரு பிறப்பறுகாயோ?
ஊர்ந்தே யுவந்தே யுற்றதல மடைந்தேன்
நின்தாள் அடியே பற்றிச் சுழன்றேன் - யான்
னொருக் நாகமென தஞ்சமருளாயோ?
கோசமைந்தும் பூதமைந்தும் பிறுத்து
பூட்டியே இவ்யாக்கை யானதுவும் - அது
புக்கிய தெஞ்சீவனையும் காவாயோ?
நில்லாது நடவாது பறப்பது செய்யாதும்
சித்தம்பெற பற்றினேன் நினையே - அது
தாமதமில்லா மரூட் கொடாயோ!
எம்பெருமானே போற்றி போற்றி
திருச்சிற்றம்பலம்
Comments
Post a Comment
Post your Comments Here :