திருச்சிற்றம்பலம்

அணிந்தும் பணிந்தும் துணிந்தும் பூண்டத்
தவத்தா லொருமுக்தி பெற வேண்டேன் ! - அல்லாது
சிட்தமடக்கி பார்யாவையு மேனக்குள் உணர்ந்தே
நித்தம் நின்புகழ் பாடுமொரு சித்தம் வேண்டியே
பெற்றபெறா யுவகை களைய வேண்டேன் ! - அல்லாது

பிறவிப்பிணி யுண்டுமாண்டு மற்றோர் பிறப்பு
என்னகருள் வாயோ? நினை வேண்டுவேன்!
அப்புக்கும் வாழ்வ தனுள்ளும் எந்தையே ...
நினையே நாடனும் நின்பாற் பற்றோக்கனும் !
யெப்புக்கும் இவ்வருள் எமக்கருளனும் - யான்

எட்டுணை எய்தேனும் அட்டுணையும் நின்
கொடையே யாம் பராபரமே !
அட்டுணையுள்ளும் யான் முக்திபெறா சித்தி
பெற்றுநின் சிந்தனை யுள்ளே திளைகனும் !
சுழற்ச்சி யாம் இது நடக்கவோ யான்வேண்டியது !

அருள்புறியும் யெந்தையே !
எம்பெருமானே போற்றி போற்றி !
திருச்சிற்றம்பலம்

Comments