இறையுரையும்பண் 0.0.0

கண்டபோதும் கொண்டதில்லை இப்பெரும் உவகைதன்னை - நின்னை
காணுதற்கென கொண்டதவம் பழித்து தகுதியுற்று,
காணவேண்டி வந்துபணிந்து வாயிற்படி காத்து - நின்
வருகைவேண்டி ஏங்கிநின்ற போதுவந்த விழிநீர் தந்த
இப்பேருவகையை -என்னவனே
கண்டபோதும் கொண்டதில்லை இப்பெரும் உவகைதன்னை - நின்னை
காணவேண்டி காத்துக்கிடக்வேயான் வேண்டினன்!
அருள்வீரே எங்குருதந்தையே!!

✍தவமணி

Comments