பாடல் 1.0.1

நல்லொழுக்க மார்கம் நாடிநன்றாய் வாழ்வுய்ய
அப்பழுக் கல்லாத நன்னடத்தை அணிந்தற்றே!
அனைய ஏகன் நாமம் உறக்கச் சொல்லி தீதும்
அண்டா கேடேவுய்யா இப்புக்கு அணிந்தற்றே!

பாலில் நீருங்க ளந்தவாரே என்னுள் நீயும்
அனைய நின்னுள் யானும் புணர்ந்தற்றே!

ஒன்றாம் வாழ்வே முடிவதுன்னடி சேர்ந்தநாளே!
அதுகாயம் காணுந்தருணம் வரையிலும் பிறவி
பிணிபிடித்த சூழற்சியாலே உழன்று கொள்ளே!

அணுவில் தொடர்ந்து வளர்ந்து வந்து நாளும்!
உற்றஞானம் மறந்து மாயா மாயை யுள்ளே
கிடந்து வளர்த்த கருமம் கரைக்க வேண்டி
காரிஞ்செய்தாரே நற்காரியஞ் செய்தாரே!

எட்டுனை எய்திப் புக்கு அடைந் தேனோ!
அறியேன் அறிந்தேன் ஒன்றே - ஏகன் நாமம்!
இயம்பும் பாக்கியம் பெற்ற அடியேன் யானோ?
நற்கதி யிட்டு மடமை யகற்றி ஞானமளிப்பாய்
நல்லொழுக்கம் நாடிநின்ற நாயக னெனக்கே!!

✍தவமணி



Comments