பொதுப்பண் 1.0.3

கொய்திடும் மாந்தரே பூவும் பூவையும் கொய்திடும் மாந்தரே!
கேளீர் கேளீரே எம்மனங்கேளீரே! பூகொய்திடும் மாந்தரே!
கொய்தீரே !கொய்தீரே! பூவும் கணியங் காயும் கொய்தீரே!
விழையா இளந்தலையும் கிளையுங் கலந்தே கொய்தீரே!
உதிர்இலை காயந்தசருகையும் அள்ளிக் கொண்டீரே!
கொய்ததும் வெட்டிக்கொண்டதும் அள்ளிச்சென்றதும்!
மாந்தரே நீர்யெமக்காம் செய்பேருதவியேயாம் மாந்தரே!
பலன் பெருவதாய் எண்ணியே எமக்குதவிடும் மாந்தரே!
நன்றியது சொன்னோம் ஏற்றுக்கொள்ளும் மாந்தரே!

✍தவமணி

Comments