பொதுப்பண் 1.0.4


காகிதம் புரட்டியும், கண்டவர் மொழிகேட்டும்
 மாயயையாய் ஞானம் பெற்றுவிட்டதாய்
இறுமாப்புக் கொண்டவர் வழிநின்று
கரைந்காலம் நிலைக்கச் செய்தேத்திட்டாய்!
உயர்மெய் ஞானோபதேசம் அருளியே காவாது காத்திட்டாய்!
நல்வழியூட்டியே நின்றநின் பாதாம்படி தீண்டிட
பேரூவகை கொண்டிட்டேன்.
நல்வழியே நற்பதிப்பு எய்தியாங்கு தலைபடலானேன்.
பூஞியத்திருந்து சூன்யத்திற்கு.
நலம் போற்றி! நாயகன் நன்று போற்றி!
சிவயோகி போற்றியே!

✍தவமணி

Comments