பக்தனுக்கு பக்தியல்ல - போதையாம்
பித்தனுக்கும் பித்தல்லவே!
சித்தனுக்கு சித்தல்ல - போதையாம்
சிவனுக்கும் சக்தியல்லவே!

மறைபொருளாம் மாதவமு ற்றவரும்
மணியே தன்னிலை கடந்தவரும் - கண்ட
மகத்துவ மந்திரமாம் தானதை நித்தம்
ஓதியேக் கண்டம றைபொரு ளன்றோ !

மாந்தரும் வேந்தரும் மாயையு ணர்ந்த
முனிவரும் மகேச்சுவரனு மல்லாத
ரூபமன்றோ யாணுமுணரந்த மத்தனைக்கு மத்தனையுள்ளும் அத்தனையுமாய் நிற்லிங்கம்!

பக்தனுக்கு பக்தியல்ல - போதையாம்
பித்தனுக்கும் பித்தல்லவே!
சித்தனுக்கு சித்தல்ல - போதையாம்
சிவனுக்கும் சக்தியல்லவே!

திருச்சிற்றம்பலம்

- தவமணி


Comments