இறைவள்ளுவம் 0.0.0


ஐந்தொ ன்றான பிண்டத்துள் அவ்வைந்துள் ஒன்றான
அண்டம்தன்னை இறையென காண்!

ஐந்தி லொன்றான நிலத்தை திடப்பொருக் கொப்புவார்
அண்டத்துக் கொப்பில்லை தானே!

நான்கிற் மூன்றளவு நீராய் காண்கிறார் யிருந்தும்
அண்டத்துக் கொப்பில்லை தானே!

நெருப்பு குக்கிர மண்டிகண்டு மிகையென சொல்வார்
அண்டத்தால் வந்ததது தானே!

காற்றி ல்லாமற் வாழாது யெவ்வுயிரு மிவ்வுலகில்
அண்டத்துள் துகளன்றோ இப்புவியும்!

ஈற்புவிசை ஈற்பதாலே ஒட்டிக் கொண்ட புயத்தை
உருட்டிச் சுழற்றுவதும் அண்டமே!

அண்டத்துள்ளே யாவும் அடங்கியது உணர்தார்
தானும் அடங்கிக் கொண்டதனாலே!

அண்டத்தாலே யாவும் உற்றது பாரீர் மாக்கள்
பிண்டம் கடந்தும் வாழீரே!

அண்டத்துள் அவணியாய் புவியுமாய் யாவுமாய்
நிற்பதென் னுள்ளுந் தானே!

அண்டம் அண்டம் பாரீர் மாக்கள் யாவும்
 அண்டம் தானே பாரீர்!!

✍தவமணி




Comments