இறையுரையும்பண் 1.0.0

சுவாசத்தின் நீளமும் ஆளமும்
அங்கம் யாவையும் சென்று
தீண்டி வர அசுத்தம் யாவும் நீங்கிடுமே.
சுத்தமது மீதமுள்ள பாத்திரம்
சக்தி நிறைஆனந்த
கூத்தூடுவது சூத்திரமே!
சுவாசம் கலந்த உதிரத்திலே
உஷ்ணம் கூடி ப்ரையோகம்
துரிதமாகுமே சேவைசெய்து
அசுத்தத்தை மலம்வகை
கழிவெனப் புறந்தள்ளிடுமே!
சுத்தமான தேகமது சிவனாமற்
வேறு சூதும்மேது!

🙏 தவமணி

Comments