இறையுரையும்பண் 1.0.4

நான் வரைந்த பாத்திரத்தில்
நானும் ஒரு பாத்திரமே!
நான் வரைந்த பாத்திரந்தான்
என்னை ஆளுகின்றதுவே!
நான் வரைந்த பாத்திரமே
என் விதி ஆனதுவே!
நான் வரைந்த பாத்திரமே
என்னை நன்று செய்ய ஏதுவாய்!
நான் வரையுமிந்த பாத்திரத்தை
நலங்கொள்ளச் செய்வதென் கடனே!

🙏 தவமணி

Comments