ஆறாம் அறிவு குறைந்தபோது
நான் அறுந்துவிழும்.
ஐந்தாம் அறிவு குறைந்தபோது
பசிப்பிணி மாய்ந்து போகும்.
நான்காம் அறிவு குறைந்தபோது
பெயர்ந்து போகா நிலை வரும்.
மூன்றாம் அறிவு குறைந்தபோது
உயிர்த்த ஜடமாவோம்.
இரண்டாம் அறிவு குறைந்தபோது
வாசி வழியே வாழ்வோம்.
முதலாம் அறிவு கடந்தபோதே
ஐய்யுள் களந்து வாழ்வோம்.
மாயயை தானே அத்தனையும்
மாயேன் எனபிதற்று மானிட பதரே.
தவமணி
Comments
Post a Comment
Post your Comments Here :