இன்று முதல் முறை கண்டது போலில்லையே.
அன்றுதான் முதலில் பேசியது போலுமில்லையே.
அன்பதை வாங்கிக்கொண்ட போதும் புதியதாய் இல்லையே.
வணங்கியபோது புதியவரை வணங்கினார் போலில்லையே.
முன்பே பேசிப்பழகி வாழ்ந்து ஒன்றாய் வளர்ந்த பாவனை தோன்றுதே.
என்ன இந்த விந்தையோ மகேஷனே உன்னோடும் காண்பேனோ இப்படியோர் உணர்வை.
அப்படியோர் அருள்புரிபவன் அருகில் இருப்பதாய் உணர்கிறேன்.

சிவனே சிதாசிவனே.

Comments