அப்படியோர் ஆனந்தம் அப்பனே அன்புகொண்ட அரவணைப்பில் ஆராத ஆனந்தமாய் அன்றுமுதல் ஆனந்தவாழ்வு அறிவுதந்து அரியதோர் அவ்வுபதேசம் அளித்து ஆறாத அறிவு அருளி அன்பனாய் அருளியவனே ஆர்வம்குறையாத ஆழத்தேடலில் ஆன்மீகம் அரும்பச்செய்து அறிவுரைகள் அள்ளிஅள்ளி அருந்தியபின்னும் அணையா ஆர்வமாய் அப்பனே ஆடியோடி அடிதேடி அடைந்த அன்பருள் அடியேனும் அங்கமன்றோ!

🙏🏽 சிவம் சதாசிவம்

Comments