ஒப்பில்லாத மாளிகை ஓய்வில்லா துவளருதே புறத்திலே!
ஒப்பனை செய்துமே மாறவில்லை இயல்புமே அகத்திலே!
என்னவே செய்யினும் நிலைப்ப தில்லையே யாக்கையும்!
நான்புகுந்த மாளிகை அனையதோர் ரூபமேநான் காணவில்லையே!





விளக்கம் :
தனித்தன்மை வாய்ந்த இந்த உடல் எவரிடத்திலும் ஒப்பிட்டு பார்க்க முடியாதபடி தனிச்சிறப்பு பெற்றது. சிங்காரம் செய்து கொள்வதால் மட்டும் மனமது செம்மையடைவதில்லை. எப்படியும் அழிந்து போகும் இந்த உடல். நிலையான மனம் வளர்ப்போம் அழியுமிந்ந உடல் பேணல் கடந்தும்
🙏🏽தவமணி

Comments