நட்பாக நட்பூக்காக வெனவல்லாது
உறவாக உறவுக்காக வெனவல்லாது
அன்பாய் அன்புக்காக வெனவல்லாது
பண்பாம் பாசாங்கிற்காக வெனவல்லாது
எங்கனம் வந்ததோ அன்பரோடு அன்பராய் எனையும் அங்கமாய் ஏற்ற அந்த அருமைபண்பை
எனன்வென உணர்வது என்வாழ்வின் பேர்பங்கு குறையச்செய்தது உன்உபதேசம் தேடியோடி நாட்கள் கழியாது மிச்சம் வைத்த உத்தியை உணர்ந்து பார்த்தபோதிலே யான்செய்த புண்ணியம் நினைகண்டதோர் பாக்கியம்.
என்கடன் நான்தீக்கிறேனா
எனக்கருள் செய்வதான உன்கடனை என்பாற் தீர்த்துக்கொள்கிறாயோ அறியேன் அறிந்தேன் ஏகன்நாமம் வாழும்தேகம்
ஏகபோகம் ஆனந்த கூத்தாட்டம்.
ஐயனே என்னசெய்வேன் கைமாறு நின்தாள் பற்றிக் கடப்பதொழிய.

சிவமாய் சதாசிவமாய்

Comments