அன்பெனக்கு போதை யதனால்
உன்அன்பான அரவனைப்பு பயம்!
நேர்மையெனக்கு போதை யதனால்
உன்னருகில் வந்துநிற்க பயம்!
ஞானமெனக்கு போதை யதனால் உன்னைவிட்டு விளகிநிற்க பயம்!
யோகமெனக்கு போதை யதனால் உன்குறள் கேளாதநாள் பயம்!
பயமெனக்கு போதை யதனால் எந்தையை காணாதிருத்தல் பயம்!
பகாபரனே பகவானே சிவயோகம் தாள் சரணம்!

Comments