உள் மொழிந்த மந்திரமும் உனையே
வந்து உரித்தாகுமே சுந்தரி - உள்ளமே
எம்பிராட்டி அன்னை அவள் குடிஉள்ள
எந்தை அவன் சரிபாதி வடிவுடையாள்!!

வடிவு தந்தாள் எனையே வார்தெடுத்து
அவள் அமைப்பு துதிபாட அருட்தந்து
பேரொளி எனவே உணர்வாய் உந்தி
தமிழ்பாடி அவள்வதன அழகுபாடினேன்!!

பாடிய மொழியும் பாட்டும் அருளிய
அம்பிகை நல்லாள் எமை பிள்ளைபோல்
சீராட்டி வந்துநல் இசைபாடும் வகை
நழ்கி பேணிக் காத்து நின்றாள் உமையே!!

உமையே எண்ணி எண்ணி மகிழ்வு
கொண்டாடி வாழ்வே பெறும் பாக்கியம்
எப்பேறு செய்தேமோ நின்நாமம் இயம்பி
நற்கதி வழிநழ்கிய மகிழ்நிரை உள்ளமே!!

சிவம் சதாசிவம்

Comments