பூமியில முத்தெடுக்க வந்தவளே சத்தியமா உன்நினைப்பு நெஞ்சுக்குள்ள
வாழுமடி! மூச்சடக்கி முத்தெடுத்த சத்தியமே நித்தியமா புண்ணியமா நீஇன்னும்
வாழுரடி! வானத்துல இன்னுமொரு நட்சத்திரம் வந்ததடி நீயுமங்கே வாழுரத பார்போமடி!
நிலவொன்னு போதலனு கேட்டதுக்கா உன்முகத்த இன்னுமொரு நிலாவ போல மாத்திபுட்ட!
சோதனைய சாதனையா மாத்திபுட்ட வாழுங்காலம் இன்னங் கொஞ்சம் இல்லாம போச்சுதடி!
சத்தியமா இன்னுமொரு பிறப்பு உனக்கு இல்லையடி உன்உசுரு எங்கநெஞ்சுல இன்னும்
இருக்குதடி! போனதெலாம் போகட்டுன்டி ஓரிடத்தில் ஓய்வெடுத்து முடிஞ்சதும் மீண்டும்
வந்துரடி வந்துடுவ நம்புரோம்! சிவம் |
Comments
Post a Comment
Post your Comments Here :