Wednesday, January 11, 2017 at 9:43pm UTC+05:30
உள்ளம் ஒருமுறை உன்னழகை நிறைத்து விட்டால் எண்ணம் ஒருமுறை உன்இருப்பில் நின்று விட்டால் தன்னால் ஒருவனை அடையாளம் செய்திட லாகுமோ அங்கும் இங்கும் எங்கும் தனியொரு நிலையில்லா சிவமே சதாசிவமே !
Wednesday, January 11, 2017 at 1:28pm UTC+05:30
மங்கை அன்னை ஆவதும் மண் பயிர் ஆவதும் மொட்டு பூத்து பின் காயாகி கனிவதும் ஞாயிரு காணாது காலமும் திங்கள் வளர்ந்து தேய்வதும் இலை உதிர்ந்து சருகாவதும் சருகு வற்றி உரமாவதுவும் பிண்டம் மக்கி மண் ஆவதுவும் பின் மலர்ந்த படைப்பும் ஒத்த சித்து இறையிடத்து சிவம் சதாசிவம்
Tuesday, January 10, 2017 at 11:04pm UTC+05:30
கட்டத்து வட்டத்து சட்டத்தை சட்டத்து ஓட்டை வழியே விட்டத்து பரமனை தரிசித்து பட்டத்து பாமரனாய் சரணடைந்து சிவம் சதாசிவம்
Tuesday, January 10, 2017 at 10:47pm UTC+05:30
கூடு செய்யும் வித்தை கண்ட மனமே வீடு பெறும் வித்தை கொண்ட மனமே அணு முதலாய் என்னை தொடரும் மனமே நானுமாய் யாவுமாய் வடிவு செய்த மனமே இருந்தும் கடந்தும் கரைந்தும் கிடக்கும் மனமே அது சிவமே சதாசிவமே
Tuesday, January 10, 2017 at 10:37pm UTC+05:30
என்னை ஒரு பொருட்டாய் மதித்தொழுகி நின்நற்றாள் நான் பற்ற வாய்பும் நழ்கி நின்னருள் பெறவே இப்பிறவி வழங்கி நினை வந்து சேரவே தவயோகம் அருளிய சிவமே சதாசிவமே நின்னங்கச் சரண்! சிவம் சதாசிவம்

Comments