அலை போலே எண்ணம் அலை போலே
கடல் போலே மனமோ கடல் போலே
நீர் போலே சிந்தனை கடல் நீர்போலே
உயிர் போலே இறையே உயிர் போலே
வாடா மலர் போலே நகையும் விழியும்
வண்ணச் சுடர் போலே எந்தையை
காட்டிடுதே தானும் தனதென்றே
உரைத்திட்ட நவில்மொழி செவிகேட்டிவே
இறைதானே எல்லாம் இறைதானே
சிவம்தானே எல்லாம் சிவம்தானே!

சிவம் சதாசிவம்

Comments