#தமிழர்
தலை நிமிர்ந்து நிற்பது எந்தன்
தமிழர் என்ற உணர்வு நிலை!
நல்வாழ்வு வேண்டி அமைந்ததே
தமிழர் என்னும் சமுதாய முறை!
பேதம் எதுவும் இல்லை எங்கள்
தமிழர் என்ற உறவு முறையில்!
அழியாது காலம் நின்று காக்கும்
தமிழர் என்ற வாழ்க்கை முறை!
அன்பு பண்பு நட்பு தாய்மை உள்ள
தமிழர் என்ற ஆதிகுடி வாழ்முறை!
நாம் நாம் என்பதிலே ஒன்று கூடி
தமிழராய் உயர்ந்தே நின்று வெல்வோம்!

தமிழாய் தமிழராய் ஒன்றாய் நன்றாய் !!

வணக்கம்
இவண்
தவமணி

Comments