Tuesday, October 18, 2016 at 9:41pm UTC+05:30 |
தன்னுள் தன்னை தானே வைத்து தனதாய் யாவையும் படைத்து அவனே அவ்வண்ணம் பக்குவமாய் பரிணமித்து ஒன்றாய் இரண்டாய் மூன்றாய் கிடந்து நான்காய் ஐந்தாய் நகர்ந்து இருந்தவனே தன்னுள் தானாய் அடங்கிட பார்தனன் ஏதோ குறைவதாய் உற்றனன் மேலாய் மனம் தன்னை படைத்திடும் படி ஏவினன் வளர்வதான ஐந்து கடந்து ஆறாம் நிலை ஆதாரமாக படைத்த யாவும் ஒருங்கவே நல்வழி வகுத்தனன் மனிதம் வளர்தனை பிறவி மூப்பு மரணம் சுழற்சியால் வாடிய மனிதனை மேல்வழி அடைந்திட அருளினன் பிறவி ஞானம் யோகம் விளைவாக முக்தி அடியோர் அடைந்திட தன்னுள் தங்கினன் சிவமே சதாசிவமே |
Comments
Post a Comment
Post your Comments Here :