Saturday, October 1, 2016 at 8:12am UTC+05:30
கண்கண்டு நானுணர்ந்த என்நாதன் சிவாயமே! என்நாவ சைந்திடும் எழும்நாதம் சிவாயமே! சங்கிரண் டில்புகுந் தவாயுவுஞ் சிவாயமே! செவியுள் எந்நேரமும் ஒலித்திடும் சிவாயமே! மெய்யுள் மெய்யான இருப்பாய் சிவாயமே! ஆறாம் புலனாம் சிந்தையுள் சிவாயமே! சிவமே சதாசிவமே இந்த வகை சந்தானம் என்னுள் நிகழுதே எந்தையவன் திருவடித் தீண்டிடவே எந்நாளும் சிவயோகம் தாழ் சரணம் யோகக்குடில்

Comments