* நம்பினார் கைவிடப்படார் * ஒருவர் மற்றொருவரை நம்பினால்
நம்பபட்டவரால் நம்பியவர் காப்பாற்றபடுவார் என்பதல்ல கருத்து. நம்பிக்கையோடு
செய்யும் எந்த காரியத்திலும் நம்பியது செவ்வனே நடக்கும் என்பதாம். எவர்மீதும்
நம்பிக்கை வைய்யாது எவர் அவர் மீதே நம்பிக்கையாய் இருத்தல் நலம்பயக்கும். என்
பசியை நான் மட்டுமே தீர்த்துக் கொள்ள முடியும் உணவு யாசகம் வாங்கியதாக
இருந்தாலும். நம்பிக்கை # தன்மீது # தானெடுத்த காரியத்தின் மீது # தான் வேண்டும்
விளைவின் மீது # தான் பெற விரும்பும் நிலை மீது எந்த காரியத்தையும்
நம்பிக்கையோடு செய்யும் போது அந்த நம்பிக்கையே வழிகாட்டியாக அமைய பெறும்
இறையடைவேன் என்பது நம்பிக்கை இறைவன் உதவுவான் என்பது ஒருவித நம்பிக்கை எல்லாம்
அவன் அவனே பார்த்துக் கொள்வான் என்பது நம்பிக்கையல்ல... எதிர்பார்ப்பு விளைவு
ஏமாற்றம் முயற்சியற்ற நம்பிக்கை வீண். நம்பிக்கை யற்ற செயல் எண்ணிய நிலைக்கு
வாரா நம்பிக்கையோடு நடைபோடுவோம்... அன்பே சிவம் சதா சிவம் |
Comments
Post a Comment
Post your Comments Here :