Monday, September 26, 2016 at 8:42pm UTC+05:30
விதி | மதி | கதி
விதியை மதியால் வெல்ல முடியுமா ?

முடியும் என்பதே உண்மை. ஆனால் எப்போது/ எப்படி என்பது தான் சாமானியரின் கேள்வி. ஆன்மீக சாதகர்களுக்கு அந்த கவலையில்லை. முறையே மெய்ஞான குரு ஒருவரி்டம் கதி நடவடிக்கை கற்று சாதகம் செய்தால் விதியை வெல்லலாம். கதியால் மதியை முறைபடுத்துவது சாத்தியம். மதியால் விதியை மாற்றுவது மிகச் சாத்தியம். கதி : அடியேன் குறிப்பிடும் கதி கிரியா, பிராணாயாமம் மற்றும் வாசியோகம் போன்றவற்றுக்கு அப்பாற்பட்டு மிகையானது. விதி : முன் செய்த கர்மத்தின் பலன்/வினை. எந்த ஒரு வினையிலும் ஞானம் பதிவு செய்ய கதி ஆதாரம். ஞானம் விதியை மாற்றும். மதி : இது முற்றிலும் ஞானம். கர்மம் கரைத்து கர்மம் வாராது செய்யின் எண்ணப்பதிவு வாராது. மனம் முற்றிலும் இறைவன் வாழும் வீடாகும். பின் எக்கனமும் மகிழ்வே அக்கனத்தில் வாழ்வே உய்யும். முக்திக்கான பாதை இதன்றோ பகவானே.

 சிவம் சதாசிவம் 

Comments