Monday, September 26, 2016 at 8:59pm UTC+05:30
கற்றலும் கற்பித்தலும்

ஏதுமறியாது பிறந்தோம். எல்லாம் இங்கேதான் கற்றோம். போகும் போது எதுவம் நம்மோடு வருவதில்லை. வயதோடு ஞாபகத் திறன் ஒத்திசைவு கொள்கிறது. விளக்கு சுடரும் போதே பல விளக்குகளை ஏற்றி வைக்க வேண்டும். "பருவத்தே பயிர் செய்" எதையும் தகுந்த காலத்திலேயே செய்திட வேண்டும். அடிப்படையில் கற்பிக்கும் போதுதான் கற்றல் ஆளமாக நிகழ்கிறது. கற்பித்தல் நேர்மையாக அனுபவத்தை மற்றுமே கற்பிக்க வேண்டும். அனுபவமில்லாத கண்டது கேட்டது படித்தது இப்படி இல்லாமல் தம் அனுபவத்தில் உண்மையானதை மட்டுமே கற்பிக்க வேண்டும். ஒருவழியில் அனுபவமும் தவறாக வாய்ப்புண்டு கவனம். கற்றல் ஞானம் கற்பித்தல் இங்கு நந்தி ஆண்டவர் பற்றி குறிப்பிட வேண்டியது ஆதாரம். தகவல்களை அசைபோடல் அவசியம். கேட்டது படித்த கண்டதெல்லா வற்றையும் நம்பிடாது அசைபோட்டு நடைமுறைபடுத்தி பார்த்து அனுபவத்தின் முலம் ஞானம் பெறுதல் மிக அவசியம். இங்கு உணர்வு மிக ஆதாரம் கற்றல் கற்பித்தல் ஆன இரண்டிலும். அடிப்படையில் ஒன்றானது. உணர்வு பெற்ற மனிதன் ஒருபோதும் தவறு செய்வதில்லை. தகவல் | அறிவு | அனுபவம் | உணர்வு | ஞானம் இப்படி அமைவதே உண்மையில் கற்றலும் கற்பித்தலும்.

சிவம் சதாசிவம்

Comments