Monday, September 26, 2016 at 9:23pm UTC+05:30
மெய்ஞானகுரு

மெய் ஞான குரு இவரை எப்படி அடையாளம் கண்டுகொள்வது ?
 அவர்
# உணர்வு பெற்ற மனிதராக இருப்பார் # இறை உணர்ந்தவராக இருப்பார்
# கடவுள் தெரிந்தவராக கண்டவராக இருப்பார்
# சுடர் விடும் சோதியாய் ஒளி பெற்றிருப்பார்
# ஒலி ஆதரமாய் தன்னை கரைத்தே மானுடமாய் இருப்பார்
# சாதி மதம் இனம் மொழி மூட நம்பிக்கை கடந்தவராய் இருப்பார்
# எளிமையாக இருப்பார்
# யாரும் எளிதில் அணுகும்படி அருகில் இருப்பார்
# எந்த வரையரைக்குள்ளும் சிக்கிடாது எங்குமாய் உண்மையாய் இருப்பார்
# ஏகபோக செல்லசெழிப்பில் மயங்கிடாது புண்ணகை பூத்த இன்முகத்துடன் இருப்பார்
# தந்தையுமாய் தாயுமாய் உணர்வுகொள்ளும்படி அன்பாய் இருப்பார்
# எதிர்பார்புகள் எள்ளவும் இல்லாது இருப்பார்
# புகழ்ச்சிக்கு மயங்காத புகழுக் கொண்ணாத உச்சத்தில் இருப்பார்
# தேகம் ருபம் உருவம் அளவு கடந்தும் எங்கும் உணரும்படி வியாபித்து கிடப்பார்
# முழுஇயக்கத்தில் உணர்வுடன் அன்பென்ற விழிப்பு நிலை தியானத்தில் இருப்பார்
# இன்னும் பலவுண்டு விவரிக்க முடியாத வர்ணனைக்குள் அடங்காத மெய்ஞானகுரு.
முக்கியமாக மெய்பொருள் | மறைபொருள் | இறை உணர்ந்தவராய் மட்டுமே இருப்பர்.

Comments