Wednesday, January 25, 2017 at 11:52pm UTC+05:30
மரணம் எனக்கு ஏதடா மாண்டதும் இல்லை நானடா மாண்டது சார்ந்து இருந்தது உண்டு மாண்டது எதுவோ அதுவாகவே இருந்தது இல்லை இவனடா இறை இறையாகவே எப்போதும் சிவம் சதாசிவம்
Wednesday, January 25, 2017 at 8:09am UTC+05:30
ஓயாத மாற்றமாய் அழியாத அழிவுமாய் சிருங்கார தோற்றமாய் ஆங்காங்கே எழிலாய் ஒரடையாளம் அற்றதாய் தனியொரு இருப்பாய் வழிப்போக்கன் போல் எனையும் படைப்புமாய் இறையே எல்லாம் இறையே சிவமே சதாசிவமே
Wednesday, January 25, 2017 at 12:13am UTC+05:30
எந்த வடிவிலும் எந்த நிலையிலும் எந்த இருப்பிலும் இயல்பாக முழுமையாக இறை! - ஒலிஒளி
Wednesday, January 25, 2017 at 12:04am UTC+05:30
தனியொரு உயர்நிலை படைப்பாக! ஒப்பனைக் கொண்ணாத வடிவாக! சிறப்பு யாவையும் புகுத்தியே தந்தனை! சீவனை பொருளை மனதை இறையே! நன்றி செய்ய வேண்டி தாள்சரண்! சிவமே சதாசிவமே
Tuesday, January 24, 2017 at 11:54pm UTC+05:30
சிந்தை அறுத்து அடியவர் உமையே வந்தனை செய்துவர் - வடிவு புக்கா எந்தையே நற்கதி வழங்கி காத்திடு! உமையாள் உடண் உறைக் கூடிநன் குடி மாந்தரை ஈன்றவர் இனையான சிவமே சதாசிவமே
Saturday, January 21, 2017 at 5:24pm UTC+05:30
காளை தம்பி வாடா வெளியே வாடி வாசல் வழியா துள்ளி வாடா வெளியே வாடி வாசல் வழியா அன்பு தழுவ காளை வெளிய வா
Friday, January 20, 2017 at 8:32pm UTC+05:30
வென்றான் தமிழன் ஏறு தழுவிய காளைகளை அன்பு தழுவிய தமிழன் உழவன் ஊர் மெச்சும் மானம் காக்கும் பாமரன் பண்பாடு காத்து நிற்க்கும் தமிழன் மரத்தமிழன் நன்றி வணக்கம் இவண் தவமணி
Friday, January 20, 2017 at 10:08am UTC+05:30
எமக்கொரு பெயருண்டு அதற்க்கொரு உணர்வுண்டு தனியொரு பலம் உண்டு வரலாறு பற்பல உண்டு அஞ்சாத நெஞ்சமும் வற்றாத வளமும் கொண்ட தமிழர் என்ற பெருமை உண்டு வணக்கம் இவண் தவமணி
Friday, January 20, 2017 at 10:01am UTC+05:30
தமிழன் என்பது தனி அடையாளம் அல்ல மனித பரிணாமத்தின் ஆணிவேர் - தமிழ் அன்னையாய் உணர்வாய் இருப்பது எதுவும் தமிழ் என்ற அடிப்படை உணர்வு நிலையே! பலநிலை இயற்க்கை பேரழிவையும் கடந்து நிற்க்கும் மனித வளமே தமிழர் என்ற நிலை கொண்ட நிலையான தன்னிலை வம்சமே தமிழர்! தமிழர்! தமிழர் என்ற தமிழரே! வணக்கம் இவண் தவமணி
Thursday, January 19, 2017 at 11:08pm UTC+05:30
#தமிழர் தலை நிமிர்ந்து நிற்பது எந்தன் தமிழர் என்ற உணர்வு நிலை! நல்வாழ்வு வேண்டி அமைந்ததே தமிழர் என்னும் சமுதாய முறை! பேதம் எதுவும் இல்லை எங்கள் தமிழர் என்ற உறவு முறையில்! அழியாது காலம் நின்று காக்கும் தமிழர் என்ற வாழ்க்கை முறை! அன்பு பண்பு நட்பு தாய்மை உள்ள தமிழர் என்ற ஆதிகுடி வாழ்முறை! நாம் நாம் என்பதிலே ஒன்று கூடி தமிழராய் உயர்ந்தே நின்று வெல்வோம்! தமிழாய் தமிழராய் ஒன்றாய் நன்றாய் !! வணக்கம் இவண் தவமணி
Wednesday, January 18, 2017 at 11:03pm UTC+05:30
தமிழன் என்ற அடிப்படை அடையாளத்துடன் ஜல்லிகட்டு அல்லது மிகச்சரியாக #ஏறுதழுவுதல் என்ற கொண்டாட்ட விழாவை ஆதரிக்கிறேன். ஆனால் அதே தமிழன் என்ற உணர்வோடு # காளைகள் வதைக்கப் படுவதையும் # இளைஞர்கள் பெருங் காயம் படுவதையும் # பந்தய பண பறிமாற்றத்தையும் # ஒரு சில குழு பணம் பண்ணுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது என் கண்முன் இத்தகைய விதி மீறல் செயல்கள் நடக்காது செய்வேன் என உறுதி சொல்கிறேன் ஏறுதழுவுதல் ஒரு ஆனந்த விளையாட்டு தடை போடாது அனுமதியுங்கள் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் நன்றி
Wednesday, January 18, 2017 at 10:55pm UTC+05:30
I Strongly Support Our Traditional #Jallikattu. But not strictly... # misusing the tradition # Torturing the bulls (The very farmer partner) # betting against the celebration # Youngsters being wonded badly # one group of people making money out this celebration in unfair dealings. I Promise i don't allow such bad things if is anywhere. Please permit us Tamilians to celebrate #Jallikattu Pranams
Tuesday, January 17, 2017 at 6:06pm UTC+05:30
எதிரில் இருப்பவரின் என் பற்றிய புரிதலில் இருப்பதே அவர் பொருத்த வரையில் நான். நான் என்பது ஒரு தனிபட்ட நிலைபாடாக தெரியவில்லை. என்னில் அல்லாமலும். சிவம் சதாசிவம்

Comments