Saturday, February 4, 2017 at 1:24am UTC+05:30 |
நம் வெற்றியை கொண்டாடாதவன் நன்பனாய் இருக்க முடியாது. நம் தோல்வியை ஆராயாதவன் துரோகியாய் இருக்க முடியாது. நம் மீது நம்பிக்கை வைக்காதவர் துணைவியாய் இருக்க முடியாது. நம் வளற்ச்சியில் பொறாமை படுபவர் தந்தையாய் இருக்க முடியாது. நம் மீது குற்றம் கண்டு அன்பு செய்யாதர் அன்னையாய் இருக்க முடியாது. |
Thursday, February 2, 2017 at 10:38pm UTC+05:30 |
சுவாசம், இதுவே ஆதாரமாய் நாசி வழியே வாசம் கொண்ட பேராற்றலாய் அந்தம் வரையே ஆடும் அம்பலத்திலே - சிரசிலே இடம் வலம் சீர்பட சீர்பட நிலை இறை அனுபவம் பின் சிவமாய் சிவமே சதாசிவமாய் !! சிவம் சதாசிவம் |
Thursday, February 2, 2017 at 10:54am UTC+05:30 |
அற்புதமாகிய இப்பிறப்பு அருளிய அனேகனே! ஆனந்தமாகிய நற்வாழ்வு நழ்கிய நாயகனே என்னில் ஒருகுறையும் இல்லை அசலாய் உன்னை போலே பாவனை தந்து அருளிய எந்தையை உமையே உமையாளே நல்லாள் போற்றி நற்றாள் பணிந்து சரணம் சரணம்!! சிவம் சதாசிவம் |
Thursday, February 2, 2017 at 12:17am UTC+05:30 |
ஆதியும் அந்தமும் அடங்கிய இருப்பாக நாதமும் சோதியும் முலஆதார வித்தாக அண்டமும் பிண்டமும் படைத்த வெளியே உனையும் எனையும் வேறாக காணேன் சிவமே சதாசிவமே |
Wednesday, February 1, 2017 at 12:49am UTC+05:30 |
உள் மொழிந்த மந்திரமும் உனையே வந்து உரித்தாகுமே சுந்தரி - உள்ளமே எம்பிராட்டி அன்னை அவள் குடிஉள்ள எந்தை அவன் சரிபாதி வடிவுடையாள்!! வடிவு தந்தாள் எனையே வார்தெடுத்து அவள் அமைப்பு துதிபாட அருட்தந்து பேரொளி எனவே உணர்வாய் உந்தி தமிழ்பாடி அவள்வதன அழகுபாடினேன்!! பாடிய மொழியும் பாட்டும் அருளிய அம்பிகை நல்லாள் எமை பிள்ளைபோல் சீராட்டி வந்துநல் இசைபாடும் வகை நழ்கி பேணிக் காத்து நின்றாள் உமையே!! உமையே எண்ணி எண்ணி மகிழ்வு கொண்டாடி வாழ்வே பெறும் பாக்கியம் எப்பேறு செய்தேமோ நின்நாமம் இயம்பி நற்கதி வழிநழ்கிய மகிழ்நிரை உள்ளமே!! சிவம் சதாசிவம் |
Sunday, January 29, 2017 at 8:53pm UTC+05:30 |
விற்பவரை தடுக்காதே ; வாங்காமல் வந்துவிடு இது சனநாயக இந்தியா! திருடனை திருத்தாதே ; பொதுவுடமை செய்துவிடு இது சனநாயக இந்தியா! பேசுவோரை தடுக்காதே ; செவிகொடாது சென்றுவிடு இது சனநாயக இந்தியா! ஊர் திருத்(ந்)த போராடாதே ; நீ பிழைபடாது வாழ்ந்துவிடு இது சனநாயக இந்தியா! வஞ்சகரை வசைபாடாதே ; வஞ்சமற்ற நெஞ்சனாகிவிடு இது சனநாயக இந்தியா! அன்னியரை விரட்டாதே ; அவனும் மனிதன்தான் விடு இது சனநாயக இந்தியா இது சனநாயக இந்தியா !! நன்றி | வணக்கம் இவண் தவமணி |
Sunday, January 29, 2017 at 7:31am UTC+05:30 |
பூத்தது ஒருமலராய் உதிர்ந்தது ஒருசிறகாய் இருநிலையிலும் ஒருநிலையாய்... சிவம் சதாசிவம் |
Sunday, January 29, 2017 at 6:56am UTC+05:30 |
ஜனனமும் ஒருகாரியமாய் நடப்பதில்லை! மரணமும் ஒருமுடிவான நிகழ்வாயில்லை! இருந்தும் ஏதோநடந்தே வருவதுஅது யாது? பரிணமித்தலே பிறப்பும் இறப்பும் அன்றி வேறாய் காணேன் பரம்பொருளே சிவாயமே! சிவம் சதாசிவம் |
Friday, January 27, 2017 at 2:36pm UTC+05:30 |
இரவின் ஒலியிலும் நிலவின் ஒளியிலும் உன்னைக் கண்டேன் அடியேன் பணிவாய்! ஒளி அகன்ற போதிலும் ஒலிவடிவில் உன்னைக் கண்டேன் உணர்வாய் இறைவா! எங்குநீ் இல்லையோ அங்கில்லை யானுமே! ஏதிருந்த போதிலும் ஏது உணர்ந்த போதிலும் உனையே அன்றிவேறில்லை இறையே!! சிவம் சதாசிவம் |
Friday, January 27, 2017 at 9:33am UTC+05:30 |
கோடான கோடி முறை உன்னை கொண்டாடி வந்திருப்பேன் தனியே உறவாடி மகிழ்ந்தோடி விட்டபிறவிகளில் இனியொரு பிறவி வேண்டேன் இறையே என்னால் ஒருகாரியம் நீயாக கலந்திடுவதே சிவமே சதாசிவமே ! சிவம் சதாசிவம் |
Comments
Post a Comment
Post your Comments Here :