Saturday, October 1, 2016 at 1:26pm UTC+05:30
எங்கே உன்னை தேடுவேன் - இறைவா என்னுள் உன்னை எங்கே தேடுவேன். எனக்குள்ளும் நீஇருப்பதாய் உள்மனத்து உணர்வொன்று சொல்லுதே! அதும் முன்ஜென்ம பாக்கியோ? நான் என்னுள் உற்று பாக்கியமோ? யாரை யாரை நாடினால் - நான் யாரை யாரை பாடினால் - நான் என்னை அறிந்து கொள்வேனோ! யாரும் எவரும் உனைகாணும் வல்லவம் சொல்லவில்லையே சடமாய் முடமாய் கள்சடங்கை ஊட்டி மதம்போதை தந்தவரெல்லாம் குருவென மமதை கொள்ள யாரை யாரை நாடினால் - நான் யாரை யாரை பாடினால் - நான் என்னை அறிந்து கொள்வேனோ! எச்சென்ம பலனாகவோ நான் உன்னைக் கண்டேன் ஐயனே! என் அம்மையப்பன் தந்திட்ட தேகத்துள் ஞானம் வைத்தவனே! உம்மையில் என்னப்பன் நீயயையா நீயேஐயா! உன்னை உன்னை கண்டு நான் என்னை என்னை கண்டேனே உன்னை உன்னை பாடினான் என் சென்மம் கரைத்துக் கொள்வேனே! சிவயோகம் சித்தம் சிவம் யோகம். யோகக்குடில்

Comments