பயம் | முயற்சி | ஆர்வம் ஆர்வத்துடன் விடாது முயற்சி செய்வது
வெற்றி பெறுவதற்க்கான ஒரே வழி. கூடவே தோல்வியின் மீது பயமும் ஆளுமையும் இருத்தல்
நன்று. தோல்வி அடிப்படையில் வீழ்ச்சியல்ல ஞானம்/அறிவு பெறுவதற்கான வாய்ப்பு.
மகத்தான வாய்ப்பு. வெற்றி வளர்ச்சியை தடுக்கலாம் திருப்தியடையும் போது.
மகிழ்வதோடு அடுத்த கட்ட நிலைக்கு தயாராக வேண்டும் முழு ஆர்வத்தோடு. இங்கு ஆதார
புரிதலாக வெற்றியும் இல்லை தோல்வியும் இல்லை. ஞானம் | பக்குவம் | அறிவு
பெறுகிறோமா இல்லையா என்பது தான் முக்கியம். அவமானம் : அறிவு பெற ஆதார நிலை
புரிந்து கொண்டால் நம்மை தாழ்வு படுத்தியவர் இழிவு படுத்தியவர் அவமானப்
படுத்தியவர் நமக்கு தைரியம் புகட்டி குருவாகிறார் மெய் ஞானம் பெற உதவியவர்
குருவாகவே இருப்பர். ஆர்வத்துடன் ஒவ்வொரு முறையும் முயற்சி செய்து ஞானம் வாராது
போய்விடுமோ என்ற பயத்துடன் பங்கு பெறுங்கள், ஞானம் பரிசாகும். வாழ்த்துக்கள்
சிவம் சதாசிவம் - யோகக்குடில் ( நரகத்தின் வாசல் சத்சங்க தலைப்பில் இருந்து) |
Comments
Post a Comment
Post your Comments Here :