துறவு | ஞானம் | முக்தி துறவு : அடிப்படை புரிதல் மிக அவசியம்
துறவு பற்றி. எல்லா சுகங்களையும் விடுத்து கட்டுபாட்டோடு இருப்பதல்ல. பசிக்கும்
போது புசியாது இருத்தல் விரதமல்ல, தேகத்துக்கு செய்யும் துரோகம். அதுபோலத்தான்
இந்த தேகத் தேவை அனைத்தும். தூக்கம் காமம் உட்பட. மிகச்சிறந்த மருந்து உணவும்
தூக்கமும். உணவு இதன் தேவையை ஒருவரின் அனுபவமும் உடல் உழைப்பும் தேகத் தேவையும்
மட்டுமே நிர்னையிக்க முடியும். கட்டுபாடுகள் அல்லாத உணவுமுறையே யோகம். மனம்
மற்றும் உடல் சுத்திகரிப்பு, தன் திறன் மேம்படுத்துதல், சீர் படுத்துதல்,இறைவனோடு
கலந்திருத்தல் போன்ற உன்னதமான செயல்களை தூக்கத்தின் போது மட்டும் செய்து
கொள்ளும்படி இறைவன் இந்த தேகத்தை படைத்துள்ளார். நீண்ட போதுமான தூக்கமே யோகம்.
ஏதுமில்லாத போதும் எல்லாம் இருந்த போதும் சுகமாய் வாழ்வது துறவு. எதுவும்
நடந்தாலும் நடக்காது போனாலும் இன்புற்று இருப்பது துறவு. அத்துனை சுகங்கள்
அனுபவித்து கடந்து சமநிலையில் இருப்பது துறவு. இல்லறம் கடந்து துறவறம் அச்சாரம்.
இல்லறம் அதே பிறவியில் துறவறம் அதே பிறவியில் பிரம்மச்சரியம் பாவம். போதையே தவிர
ஞானம் வழங்கா. சிவம் சதாசிவம் |
Comments
Post a Comment
Post your Comments Here :