ஏதுவான நாதமதை மீட்டுகின்ற நாயகனை காணுகின்ற அவாவை துரிதவேக
ஆர்வமதை கட்டியிடும் எண்ணங்களை என்ன செய்யவோ நாதனே நான்முகனே எனைகேட்டா
வந்ததிந்த சிந்தை மலைக் குவியலை அள்ளி அள்ளி போட்டாலும் குறையாதேன் மொத்தமாய்
ஒற்றையாய் நிந்தன் நாமம் உச்சறிக்க உச்சரிக்க எந்தையவன் தாள் கிடந்தே கிடக்க
உருகவுருக வித்தையாய் விந்தையாய் மூர்த்தி பால் சிந்தை பெறுக பெறுக சுமையே
கூடாது மனமது மாந்தரீக வெறுமையானதே வெறுமையான அவனை சிவனை இறைவனை சிந்தித்
திருக்கையிலே கலைந்துபோன ஆத்துமத்தை காலன் என்ன செய்லாகுமோ விரும்பியபடி மரணமது
வாய்க்கவே அருள்புரிந்திட்ட போது. சிவமே சதாசிவமே |
Comments
Post a Comment
Post your Comments Here :