Wednesday, September 21, 2016 at 7:22am UTC+05:30
குரு என்பவர் யார்? அவர் எப்படி இருக்க வேண்டும்? மெய்யான குரு ஒருவரை எப்படி கண்டுபிடிப்பது? குரு அவருக்கான இலக்கணம் என்ன? சிவனே..... இதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் அவரெதிர்ல இருக்கனும். அவர் என்னெதிர்ல இருக்கனும். நான் தப்பு பண்றப்ப ஓங்கி அரை விடுரதுக்கு என் கண்ணம் அவருக்கு எட்டுபடி பக்கத்துல இருக்கனும். அதே போல நல்லதா ஏதாவது செஞ்சா என் தோள் தட்டி "டேய் மவனே சூப்பர்டா நல்லா இருடான்னு" சொல்ல அது எங்காதுல கேட்கனும். (டிங்ங்ங்ங்...) தன் மகனபோல என்ன கட்டி புடிக்கனும் அன்பும் கண்டிப்பும் காட்டனும். எந்தையைபோல் அவன் தாள் நான் பற்றனும். என் சிரசு அவன்தாள் படும்படி அருகில் இருக்கனும். அவ்வளவு தாங்க அப்படி ஒரு மனிதராக குருவாக அடியேன் கண்டது. திருஞானதேசிகர் சிவயோகி சிவகுமார் Sivayogi

Comments